Friday, May 27, 2011

ஊர் திரும்புதல்.

"நான் 10 வருஷத்துல திரும்பி போவேன்." விசு கொஞ்சம் எரிச்சலோடு சொன்னான்.
"5 வருஷம்னு முன்னாடி சொன்னியே?. கண்டிப்பா நீ திரும்பிப் போக மாட்டே." அருணுக்கு விசுவ மடக்கின திருப்தி.
"இல்லை.. நான் திரும்பி போவேன். போகணும்". தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
"சரி. எந்த ஊருக்கு திரும்பி போவ? உன் சொந்த ஊர் எது? அஞ்சு ஆறு ஊர்ல படிச்சிருக்க, மூணு ஊர்ல வேல பாத்தே. ஒரு ஊர்ல, நாலு வருஷம் சேந்தாப்ல இல்லை. இதுல ஊருக்குப்போரானாம். நான் இரவது வருஷமா கோயம்பத்தூர்ல வளந்தேன், படிச்சேன். அது தான் என் ஊரு..நான் இங்க வந்தது சீக்கிரம் காசு சம்பாதிச்சிட்டு போறதுக்கு. நான் இன்னும் மூணு நாலு வருஷத்துல திரும்பி போய்டுவேன்". "கல்யாணம் பண்ணி, கொழந்தை பொறந்தா, இந்த ஊர்ல ஒருத்தர் சம்பாதிச்சு குடும்பம் நடத்த முடியாது. இங்க இருக்கிற நம்ம மக்கள்கிட்ட பேசி பாரேன் தெரியும்"."கோயம்பத்தூர் அருமையான ஊரா இருந்திச்சு. இந்த சௌத்லருந்து வந்து ஊற நாரடிசிட்டாங்க. இவனுங்களையெல்லாம் யாரு வரச்சொன்னது ?".
"உன்னை மட்டும் இங்கருந்து யாராவது வந்து வெத்தலப்பாக்கா வச்சு கூப்புட்டாங்க ? நீ வரல, அது மாதிரிதான். யாதும் ஊரே, யாவரும் கேளிர் டா.".. அப்பாடா, அருணுக்கு பதில் சொல்லிட்டோம்.
"பாத்தியா, நீயே சொல்ற. யாதும் ஊரே, யாவரும் கேளிர்னு. அப்புறம் எதுக்கு ஊருக்கு போவேன்னு சொல்ற? உன்ன பத்தி எனக்குத் தெரியும். இப்ப இருக்கறத விட இன்னும் better
ஆகனும்னு தான் நெனப்ப.நம்ம தலைமுறைக்குள்ள இந்தியா அமேரிக்காவ முந்தும்னு எனக்கு தோணலை."...அருண் உடமாட்டான் போல.
"இல்லை டா. என் டீம்ல இருக்குற நிங், ஜியானுகேல்லாம் சீனா எவளோ முன்னேறினாலும் திரும்பி போற இடீயாவே இல்லை. அவங்களுக்கெலாம் அங்கருந்து தப்பிச்சு வந்தாப்போதும்னு இருந்திருக்காங்க. நேத்து, சாப்பிடும்போது, லூசி (அமெரிக்க பெயர் சூட்டிக்கொண்ட சீனப்பெண்.. சீனர்கள் அமெரிக்க வந்தவொடனே பண்ற மொத வேலை, அமெரிக்க பெயர் வச்சுக்கிறது.) தன் மகன், தேர்தல்னா என்னனு தனுக்கு சொல்லிக்கொடுதான்னு ஒரே பெருமையா சொன்னாங்க. நாம அப்படியில்லைல..நம்ம ஊர் முன்னேரும்டா. அங்கதாண்ட growth இருக்கு. எங்க போவேன்னெல்லாம் தெரியாது. பெங்களூரோ சென்னையோ. பாப்போம்."
"அப்ப, நம்ம ஊரு முன்னேருசுன்னா தான் போவேங்கற. ஆனா இங்க இருக்கற மாதிரி அங்க சொகுசா இருக்க நாளாகும். இங்க டிராபிக் பிரச்சனை இல்லை, pollution இல்லை."
.........................
விவாதம் தொடர்ந்து கொண்டே இருந்தது. முடிவுக்கு வருவதுபோல இல்லை.

இருவரையும், அமைதியாக ராஜேந்திரன் பாத்துகொண்டிருந்தான்.
ராஜா போன லீவுக்கு ஊருக்கு போயிருந்தான். அப்ப, அவங்க அப்பா, சித்தப்பாகிட்ட சொன்னார், "நாம, மதுர வந்து நாப்பது வருஷம் ஆகப்போது. இந்த பசங்க காலேஜ் முடிச்சு, கல்யாணம் முடிஞ்சா, நாம எல்லாம் திரும்பி கருங்குலத்துக்கே போயிருவோம். அங்க போயி, கொய்யா மரம், மா மரம்லாம் இருக்குற தோப்புல ஒரு வீடு கட்டி, ஆட்டுப்பண்ணை வைக்கணும்டா செல்வராஜூ". "ஆமாம்னே. சின்னவயசுல, அய்யனோட பட்டில ஆட்டுக்கு காவல் இருப்போம்லன்னே?......போயிருவோம், போயிருவோம்" ...

Thursday, January 7, 2010

spanish மொழியும் நாங்களும்.

முதல் குரங்கு பேசிய மொழி தமிழ் என்று நம்பிக்கொண்டிருக்கும் நான், பயணத்தின் பொது ஸ்பானிஷ் மொழி உபயோகித்தமை பற்றிய பதிவு இது. ஸ்பானிஷ் மொழியில், நான் முதலில் கற்ற சில வார்த்தைகள். (சி,நான், கிராசியஸ், தேநாத, ஓலா, etc).

பல்வேறு ஊர்களிலும் இந்தியர்களை கண்டதில்லை போலும், எல்லா இடங்களிலும் வெறித்து பார்த்தனர். அதை தவிர்க்க, மெக்சிக்கன், மாயன் மக்களை சந்தித்தால் 'ஹாய்' சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். முதலில் ஒரு முதியவரை கண்டேன். 'கிராசியஸ்' என்ற எனது அறைகூவலுக்கு அவர் ஒரு வெறித்த பார்வையையே பதிலாக தந்தார். இந்தியர்களை போல அறியாதவர்களிடம் 'ஹாய்' சொல்லும் பழக்கம் இல்லை போலும் இவர்களுக்கு.

சிச்சேன் இத்ஜாவுக்கு செல்வதற்கு கேன்கூனிலிருந்து இரு வழிகள் உண்டென்று அறிந்தோம். (toll-way, free-way). free-way இல் சென்றால், கிராமப்புறங்களை பார்ப்போம், ஆகையால் அவ்வழி செல்வோம் என்று முடிவெடுத்தோம். பயணம் முழுமைக்கும், நான் வரைபடத்தையும், புத்தகங்களையும் வைத்துக்கொண்டு அடுத்து எவ்வூர் வரும், அதன் சிறப்பு என்ன போன்ற விவரங்களை அருணுடன் பகிரிந்துகொண்டே வந்தேன். (GPS device மெக்ஸிகோவின் மாற்றங்களை அறிந்திருக்கவில்லை). ஓரிடத்தில் இரு வேறு திசைகளில் 'மெரிடா' என்று எழுதப்படிருந்தது. ஒன்றில் 'மெரிடா','லிப்ரே' என்றும், மற்றொன்றில் 'மெரிடா','சிச்சேன் இட்சா','கோட' என்றும் எழுதி இருந்தார்கள். வரைபடத்தை பார்த்து 'லிப்ரே' என்ற ஊர் இதில் இல்லை, அது எதோ சுத்து வழி போல, நாம் 'சிச்சேன் இட்சா' என்று காட்டும் திசையில் செல்வோம் என்றேன். பிறகு, மாயனை பற்றியும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றியும் அருணுக்கு lecture கொடுத்து கொண்டே வந்தேன். வழியில் ஈ, காக்கை இல்லை. அருண் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை என் lecture ஐ இடைமறித்து toll-வே, free-way பிரிவு எப்போது வரும், கிராமங்களை காணோமே, மற்ற வண்டிகள் எங்கே என்று கேட்டுகொண்டே வந்தார். நான் கதை சொல்லுகிற ஆர்வத்தில் எல்லாம் கூடிய விரைவில் வரும், நம்மை போன்று ரோடு ட்ரிப் போகிறவர்களை தவிர அனைவரும் toll-way இல் சென்றுவிட்டனர், அதனால் தான் ரோடு வெறிச்சோடி உள்ளது போன்று ஒவ்வொரு முறையும் ஒரு விளக்கத்தை கொடுத்து அவரை சமாளித்தேன். ஒரு மணிநேரம் சென்ற பிறகு எனக்கும் சந்தேகம் வந்தது. தூரத்தில் toll-plaza வும் தெரிந்தது. 'ஹி ஹி ' என்று அருணை பார்த்தேன். 20 USD கட்டிய பிறகு 'லிப்ரே' என்றால் இலவசம் என்றும் 'கோட' என்றால் 'காசு' என்றும் புரிந்தது. அரைகுறை பிரெஞ்சு புலமை பெற்ற எங்கள் இருவருக்கும் 'லிப்ரே' புரியாமல் போனது பற்றி அச்சிரியபட்டோம். ( என்ன பிரெஞ்சு படித்தோமோ, தெரியவில்லை).

எல்லா உணவகங்களிலும் வேறுஒரு பிரச்சனை வந்தது. தீர்த்தம் அருந்தும் பழக்கம் இல்லாததால், குடிப்பதற்கு வெறும் தண்ணீர் கேட்போம். mineral water கொண்டு வந்து வைப்பார்கள். Mineral water வேண்டாம், குழாய் நீரே போதும் என்று சொல்லத் தெரியவில்லை. என்னென்னவோ செய்கை எல்லாம் செய்து காட்டினாலும் அவர்களுக்கு புரியவில்லை. துரை, டம்ப்ளரில் நீர் கேட்கிறார் போல் என்று நினைத்து, mineral வாட்டரை டம்ப்ளரில் கொட்டி கொண்டுவருவர். (அதற்கு உணவு பதார்த்தங்களுக்கு இணையாக பில்லும் போடுவர்). கடைசியாக மேரிடாவில் விடுதி உரிமையாளர் பாட்டி துண்டு சீட்டில் எழுதிகொடுத்தார். (dos vasso agua naturalle. non agua mineralle, non agua bottelle :-)). ஸ்பானிய புலமையை காட்டுவதற்காக, உணவகங்களில், எங்கள் இருவருக்கும் மேசையை ரிசர்வ் செய்ய கற்றுகொண்டோம். (uno messa para dos). ஆனால், இதை கூறிய அடுத்த நொடி, அவர்கள் சரளமான ஆங்கிலத்தில் என்ன வேண்டும் என்று கேட்பர். (பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கன்னடத்தில் பேசும்போது 'இன்னா சார், தமிலா, எங்க போவனும்' என்று கேட்டது நினைவுக்கு வந்தது.)

சில நாட்களில், ஓரளவு என்ன கேட்கிறார்கள் என்று புரிய ஆரம்பித்தது. (புரிந்ததுபோல் நடந்து கொண்டோம் :-)). சில இடங்களில் மிலிட்டரி செக்போஸ்ட் வரும். வந்து எதோ ஸ்பானிஷில் கேட்பார்கள். அருண் எந்த ஊரிலிருந்து வருகிறோமோ அதன் பெயரை சொல்லுவார். அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டிய ஊரின் பெயரை சொல்லுவார். மூன்றாவது கேள்விக்கு 'non puebla espanol' (ஸ்பானிஷ் தெரியாது) என்று சரண்டர் ஆகிவிடுவோம். அவனும் அடுத்து சில வாக்கியங்களை பேசிவிட்டு எங்களை பார்ப்பான். 'சி சி' (yes, yes) என்று தலையை ஆட்டிவிட்டு புறப்படுவோம்.


இருந்தாலும் எல்லா இடங்களிலும், மக்களை பார்த்தவுடன் 'கிராசியஸ்' சொல்வதை விடவில்லை. மூன்று நாட்களாக நான் 'கிராசியஸ்' சொன்னால், ஏன் யாரும் பதில் அளிக்கவில்லை என்ற மர்மம் மட்டும் விளங்காமல் இருந்தது. அருண் கண்டுபிடித்துவிட்டார். 'தம்பி, நீ எல்லா இடங்களிலும் யாரைவது பார்த்து 'நன்றி' என்கிறாய். அவர்கள் என்ன பதில் சொல்லவேண்டும் என்று நினைக்கிறாய்' என்றார். பிறகு தான் புரிந்தது, ''ஓலா' என்றால் ஹாய். கிராசியஸ் என்றால் நன்றி. 'ஓலா' சொல்ல நினைத்து 'கிராசியஸ்' சொல்லிக்கொண்டிருகிறேன் என்று. (அத்திரி பாச்சா கொழுக்கட்டை கதை போல). ஒரு வழியாக, பயண முடிவின் பொது சில ஸ்பானிய வாக்கியங்களும், வார்த்தைகளும் தெரிந்துகொண்டோம்...அதை வைத்து எனது மொழி ஆராய்ச்சியில், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று கண்டுகொண்டேன். (வளரும்..)

Tuesday, January 5, 2010

Mexico - part 1

(This will be a lengthy and detailed series. So, that anyone who is planning to go there in future may use this for their planning).

I wanted to go to Mexico to see Mayan Civilization for quite some time. During winter vacation, had time and more importantly money to fulfill the wishes. (Was about to spend the winter by sleeping, thanks to Joseph, started to think about Mexico) So, packed the bags and started to Yucatan peninsula. I traveled with Arun, a veteran backpacker. (This blog is not enough for his antics.. so, reserving all those stories in some other stories).

Mayan civilization spreads across southern Mexico, Belize, Honduras and Guatemala. (Spread in Central America). After reading through wiki, historian’s accounts and watching couple of youtube videos, choose some must visit sites. (Present in Quintana Roo, Campeche, Yucatun, Chiapas states of Mexico and Guatemala).

Later, came to know about an unrest which happened in Chiapas and about the border issues between Mexico and Guatemala. So, decided to drop both of them from the trip.
Well-wishers have warned us regarding the ongoing drug wars in Mexico (we saw plenty of military check posts, couple of federalia vehicles with mounted machine guns during the trip, which reminded us, how serious the issue is).

Cancun is a major tourist destination in Mexico and Mexican government is promoting it in a big way. So, we decided to start and end our trip in Cancun. We booked an automatic economy car through Kemwel. We bought a detailed road map, GPS map of mexico cities, spanish-english dictionary, fodor's travel guide to south east mexico, took couple of books from college library for reference, called credit card company to inform them we are travelling outside and they shouldn't block access to it, etc. Everything went according to plan (well, things went smooth throughout the trip) and we reached Cancun on December, 22, 2009.

First surprise of our trip came, when we went to pick up our car. The person there told us, they didn’t have any automatic car and only manual car is available. Arun drove a manual car three years back in India. We argued for sometime, but the rental company (Europcar) said, they didn’t have any. Since, we didn’t have any other option, Arun decided to drive it. (He drove really well through out the trip). So, rule number 1: when you plan to travel outside US, Europe be prepared for manual car.

surprise 2 : We are totally wrong in guessing the weather. Many sites indicated that it will be above 20 C and may get chilly in night. We didn't pack many shorts / half-sleeved tees. But Yucantan was almost like Chennai in winter. So, didn't use some of the clothes which we took and bought some in Mexico. (will continue..).

Monday, January 4, 2010

மெக்ஸிகோ - பாகம் 1


நண்பர்களே,

நீண்ட நாட்களாக மெக்ஸிகோ சென்று மாயன் நாகரீகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை. மனமும், பணமும் ஒரு சேர அமைந்ததில், நண்பர் (அருண்) ஒருவருடன் மெக்ஸிகோ செல்ல திட்டமிட்டேன். (செம் விடுமுறையை தூங்கி கழிக்கலாம் என்றிந்தபோது, ஊர் சுத்து என்று தூண்டிவிட்ட ஜோசப்க்கு நன்றி..).

டூர் ட்ரிப் பிளான், விசா வாங்கப் போய் வந்த கொட்டாவி கதைகள், மாயன் சரித்திரம், பார்த்த ஊர், நாடு, நகரம், மற்ற நிகழ்வுகள் ஆங்கிலத்தில் தனி blog ஆக வெளிவரும். இங்கு நான் சந்தித்த மக்களை பற்றி எழுதுகிறேன். தமிழில் இது என் முதல் முயற்சி. பிழைகளை சுட்டிக்காட்டினால் பரிசு தரப்படும் :-).

சில்வியா - ஏரோப்லேன் பக்கத்து சீட்டில் அமர்ந்த 'பேரிளம் பெண்'. (பார்க்க படம்). பேசுவதற்கு ஒன்றும் இருக்காது என்று எண்ணி சிறிது கண்ணயர்ந்தேன். அவள் வைத்திருந்த lonely planet புத்தகம் பேச தூண்டியது. Italian, Columbia University Biologist போன்ற விவரங்கள் அறிந்த பின்னர் இன்று / நாளை என்ன பிளான் என்று விசாரித்தேன். ஒன்றும் இல்லை என்றாள். தங்கும் விடுதி உட்பட எதுவும் தெரியாதாம் அவளுக்கு. பத்து நாளும் என்ன செய்யவேண்டும், எங்கு தங்கவேண்டும், இன்ன பிறவற்றையும் பிளான் செய்து வந்திருந்த எனக்கு ஒரே வியப்பு. தனியாக ஒரு பிளானும் இல்லாமல் இவள் கிளம்பி வந்துவிட்டாள் என்ற நான் அச்சிரியப்பட , அருண், பயணத்தின் போது இது போன்று பலர் வருவர் என்றார். அவள் எங்களுடன் சேர்ந்து கொண்டாள். இரவு கேன்கூன் கடற்கரையை பார்க்க மூவரும் சென்றோம். நடுநிசி ஆகிவிட்டதால் இன்னும் 20 நிமிடத்தில் விடுதிக்கு செல்வோம் என்றேன். கடற்கரையில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று பிளான் போடுகிறதே இது, என்று அவள் என்னை முறைக்க, முன்பின் தெரியாதவர்களுடன் ஊர் சுத்துதே இது, என்று நானும் வெறித்தேன். அன்றைய பொழுது இனிதே கழிந்தது. மறுநாள் காலை சிற்றுண்டிக்கு பின் சில்வியாவிடம் விடை பெற்று மாயன் நகரங்களை நோக்கி பயணித்தோம்.

Sunday, January 18, 2009