Monday, January 4, 2010

மெக்ஸிகோ - பாகம் 1


நண்பர்களே,

நீண்ட நாட்களாக மெக்ஸிகோ சென்று மாயன் நாகரீகத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை. மனமும், பணமும் ஒரு சேர அமைந்ததில், நண்பர் (அருண்) ஒருவருடன் மெக்ஸிகோ செல்ல திட்டமிட்டேன். (செம் விடுமுறையை தூங்கி கழிக்கலாம் என்றிந்தபோது, ஊர் சுத்து என்று தூண்டிவிட்ட ஜோசப்க்கு நன்றி..).

டூர் ட்ரிப் பிளான், விசா வாங்கப் போய் வந்த கொட்டாவி கதைகள், மாயன் சரித்திரம், பார்த்த ஊர், நாடு, நகரம், மற்ற நிகழ்வுகள் ஆங்கிலத்தில் தனி blog ஆக வெளிவரும். இங்கு நான் சந்தித்த மக்களை பற்றி எழுதுகிறேன். தமிழில் இது என் முதல் முயற்சி. பிழைகளை சுட்டிக்காட்டினால் பரிசு தரப்படும் :-).

சில்வியா - ஏரோப்லேன் பக்கத்து சீட்டில் அமர்ந்த 'பேரிளம் பெண்'. (பார்க்க படம்). பேசுவதற்கு ஒன்றும் இருக்காது என்று எண்ணி சிறிது கண்ணயர்ந்தேன். அவள் வைத்திருந்த lonely planet புத்தகம் பேச தூண்டியது. Italian, Columbia University Biologist போன்ற விவரங்கள் அறிந்த பின்னர் இன்று / நாளை என்ன பிளான் என்று விசாரித்தேன். ஒன்றும் இல்லை என்றாள். தங்கும் விடுதி உட்பட எதுவும் தெரியாதாம் அவளுக்கு. பத்து நாளும் என்ன செய்யவேண்டும், எங்கு தங்கவேண்டும், இன்ன பிறவற்றையும் பிளான் செய்து வந்திருந்த எனக்கு ஒரே வியப்பு. தனியாக ஒரு பிளானும் இல்லாமல் இவள் கிளம்பி வந்துவிட்டாள் என்ற நான் அச்சிரியப்பட , அருண், பயணத்தின் போது இது போன்று பலர் வருவர் என்றார். அவள் எங்களுடன் சேர்ந்து கொண்டாள். இரவு கேன்கூன் கடற்கரையை பார்க்க மூவரும் சென்றோம். நடுநிசி ஆகிவிட்டதால் இன்னும் 20 நிமிடத்தில் விடுதிக்கு செல்வோம் என்றேன். கடற்கரையில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்று பிளான் போடுகிறதே இது, என்று அவள் என்னை முறைக்க, முன்பின் தெரியாதவர்களுடன் ஊர் சுத்துதே இது, என்று நானும் வெறித்தேன். அன்றைய பொழுது இனிதே கழிந்தது. மறுநாள் காலை சிற்றுண்டிக்கு பின் சில்வியாவிடம் விடை பெற்று மாயன் நகரங்களை நோக்கி பயணித்தோம்.

9 comments:

  1. நல்ல ஆரம்பம். ரசித்துப் படித்தேன். சில்வியா சிக்காமல் சிதறியது சிறிது வருந்ததக்க செய்தி :-)

    ReplyDelete
  2. Sylvia pathi innum information potrukalame...avala katti pudichu potta edukama thalaiku mel sign vachirukeenga...watta disaappointment

    ReplyDelete
  3. @karthik & @other arun - விசு "kaun banega crorepati" மாதரி அந்த பொண்ணு கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு வந்தான்....அத்துடன், அந்த "இருவரும், மற்ற ஒருவரை வெறித்து பார்த்தனர்" என்ற வரியை படிக்கும் போதே தெரியவேண்டாம் இது ஆவுற கதை இல்லைன்னு....

    ReplyDelete
  4. @all: visu range thani range.. avar oru koondukkul sikkatha kili.. manidharul maanikkam..yaarum thappaga ninaikavo pesavo koodathu.. annan ezhthukinae irupaaru.. namma padichikinae irukanum!!!

    ReplyDelete
  5. @arunmib - "kaun banega crorepati" எப்படி இருந்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது.
    விசாரித்தேன், எனக்கு ஒரே வியப்பு போன்ற வார்த்தைகள் அதை உறுதி செய்கின்றன.

    @Karthik - இன்னும் கிளவிகளை correct செய்யர அளவுக்கு அவன் போகல

    ReplyDelete
  6. very very well written! lens mamaavum, uu paa vum than missing :)

    ReplyDelete
  7. கமெண்ட்ஸ் எழுதி என்னை வாழவைக்கும், ரசிகப்பெறு மக்களுக்கு கோடானகோடி நன்றிகள்..def, it motivates a lot to right more.
    @karthi, public forum என்பதால் சிறிது அடக்கி வசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
    @senti, arunmib, arun B, Venki - அறிவுரை மற்றும் comments நன்றி..
    @வெங்கி -- லென்சு மாமா தான் arunmib.. ஊ.பா பற்றி எழுதுவதற்கில்லை..
    @sathya - poda dubukku..constructive criticism ethavathu solluda..will be useful to all those, who are / may be writing in tamil..

    ReplyDelete
  8. @all - whoever feels there is not enough spice or juice in the story, mail me I'll tell "விசுவின் காமக்களியாட்டங்கள் ".....

    ReplyDelete