Thursday, January 7, 2010

spanish மொழியும் நாங்களும்.

முதல் குரங்கு பேசிய மொழி தமிழ் என்று நம்பிக்கொண்டிருக்கும் நான், பயணத்தின் பொது ஸ்பானிஷ் மொழி உபயோகித்தமை பற்றிய பதிவு இது. ஸ்பானிஷ் மொழியில், நான் முதலில் கற்ற சில வார்த்தைகள். (சி,நான், கிராசியஸ், தேநாத, ஓலா, etc).

பல்வேறு ஊர்களிலும் இந்தியர்களை கண்டதில்லை போலும், எல்லா இடங்களிலும் வெறித்து பார்த்தனர். அதை தவிர்க்க, மெக்சிக்கன், மாயன் மக்களை சந்தித்தால் 'ஹாய்' சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். முதலில் ஒரு முதியவரை கண்டேன். 'கிராசியஸ்' என்ற எனது அறைகூவலுக்கு அவர் ஒரு வெறித்த பார்வையையே பதிலாக தந்தார். இந்தியர்களை போல அறியாதவர்களிடம் 'ஹாய்' சொல்லும் பழக்கம் இல்லை போலும் இவர்களுக்கு.

சிச்சேன் இத்ஜாவுக்கு செல்வதற்கு கேன்கூனிலிருந்து இரு வழிகள் உண்டென்று அறிந்தோம். (toll-way, free-way). free-way இல் சென்றால், கிராமப்புறங்களை பார்ப்போம், ஆகையால் அவ்வழி செல்வோம் என்று முடிவெடுத்தோம். பயணம் முழுமைக்கும், நான் வரைபடத்தையும், புத்தகங்களையும் வைத்துக்கொண்டு அடுத்து எவ்வூர் வரும், அதன் சிறப்பு என்ன போன்ற விவரங்களை அருணுடன் பகிரிந்துகொண்டே வந்தேன். (GPS device மெக்ஸிகோவின் மாற்றங்களை அறிந்திருக்கவில்லை). ஓரிடத்தில் இரு வேறு திசைகளில் 'மெரிடா' என்று எழுதப்படிருந்தது. ஒன்றில் 'மெரிடா','லிப்ரே' என்றும், மற்றொன்றில் 'மெரிடா','சிச்சேன் இட்சா','கோட' என்றும் எழுதி இருந்தார்கள். வரைபடத்தை பார்த்து 'லிப்ரே' என்ற ஊர் இதில் இல்லை, அது எதோ சுத்து வழி போல, நாம் 'சிச்சேன் இட்சா' என்று காட்டும் திசையில் செல்வோம் என்றேன். பிறகு, மாயனை பற்றியும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப் பற்றியும் அருணுக்கு lecture கொடுத்து கொண்டே வந்தேன். வழியில் ஈ, காக்கை இல்லை. அருண் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை என் lecture ஐ இடைமறித்து toll-வே, free-way பிரிவு எப்போது வரும், கிராமங்களை காணோமே, மற்ற வண்டிகள் எங்கே என்று கேட்டுகொண்டே வந்தார். நான் கதை சொல்லுகிற ஆர்வத்தில் எல்லாம் கூடிய விரைவில் வரும், நம்மை போன்று ரோடு ட்ரிப் போகிறவர்களை தவிர அனைவரும் toll-way இல் சென்றுவிட்டனர், அதனால் தான் ரோடு வெறிச்சோடி உள்ளது போன்று ஒவ்வொரு முறையும் ஒரு விளக்கத்தை கொடுத்து அவரை சமாளித்தேன். ஒரு மணிநேரம் சென்ற பிறகு எனக்கும் சந்தேகம் வந்தது. தூரத்தில் toll-plaza வும் தெரிந்தது. 'ஹி ஹி ' என்று அருணை பார்த்தேன். 20 USD கட்டிய பிறகு 'லிப்ரே' என்றால் இலவசம் என்றும் 'கோட' என்றால் 'காசு' என்றும் புரிந்தது. அரைகுறை பிரெஞ்சு புலமை பெற்ற எங்கள் இருவருக்கும் 'லிப்ரே' புரியாமல் போனது பற்றி அச்சிரியபட்டோம். ( என்ன பிரெஞ்சு படித்தோமோ, தெரியவில்லை).

எல்லா உணவகங்களிலும் வேறுஒரு பிரச்சனை வந்தது. தீர்த்தம் அருந்தும் பழக்கம் இல்லாததால், குடிப்பதற்கு வெறும் தண்ணீர் கேட்போம். mineral water கொண்டு வந்து வைப்பார்கள். Mineral water வேண்டாம், குழாய் நீரே போதும் என்று சொல்லத் தெரியவில்லை. என்னென்னவோ செய்கை எல்லாம் செய்து காட்டினாலும் அவர்களுக்கு புரியவில்லை. துரை, டம்ப்ளரில் நீர் கேட்கிறார் போல் என்று நினைத்து, mineral வாட்டரை டம்ப்ளரில் கொட்டி கொண்டுவருவர். (அதற்கு உணவு பதார்த்தங்களுக்கு இணையாக பில்லும் போடுவர்). கடைசியாக மேரிடாவில் விடுதி உரிமையாளர் பாட்டி துண்டு சீட்டில் எழுதிகொடுத்தார். (dos vasso agua naturalle. non agua mineralle, non agua bottelle :-)). ஸ்பானிய புலமையை காட்டுவதற்காக, உணவகங்களில், எங்கள் இருவருக்கும் மேசையை ரிசர்வ் செய்ய கற்றுகொண்டோம். (uno messa para dos). ஆனால், இதை கூறிய அடுத்த நொடி, அவர்கள் சரளமான ஆங்கிலத்தில் என்ன வேண்டும் என்று கேட்பர். (பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் கன்னடத்தில் பேசும்போது 'இன்னா சார், தமிலா, எங்க போவனும்' என்று கேட்டது நினைவுக்கு வந்தது.)

சில நாட்களில், ஓரளவு என்ன கேட்கிறார்கள் என்று புரிய ஆரம்பித்தது. (புரிந்ததுபோல் நடந்து கொண்டோம் :-)). சில இடங்களில் மிலிட்டரி செக்போஸ்ட் வரும். வந்து எதோ ஸ்பானிஷில் கேட்பார்கள். அருண் எந்த ஊரிலிருந்து வருகிறோமோ அதன் பெயரை சொல்லுவார். அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டிய ஊரின் பெயரை சொல்லுவார். மூன்றாவது கேள்விக்கு 'non puebla espanol' (ஸ்பானிஷ் தெரியாது) என்று சரண்டர் ஆகிவிடுவோம். அவனும் அடுத்து சில வாக்கியங்களை பேசிவிட்டு எங்களை பார்ப்பான். 'சி சி' (yes, yes) என்று தலையை ஆட்டிவிட்டு புறப்படுவோம்.


இருந்தாலும் எல்லா இடங்களிலும், மக்களை பார்த்தவுடன் 'கிராசியஸ்' சொல்வதை விடவில்லை. மூன்று நாட்களாக நான் 'கிராசியஸ்' சொன்னால், ஏன் யாரும் பதில் அளிக்கவில்லை என்ற மர்மம் மட்டும் விளங்காமல் இருந்தது. அருண் கண்டுபிடித்துவிட்டார். 'தம்பி, நீ எல்லா இடங்களிலும் யாரைவது பார்த்து 'நன்றி' என்கிறாய். அவர்கள் என்ன பதில் சொல்லவேண்டும் என்று நினைக்கிறாய்' என்றார். பிறகு தான் புரிந்தது, ''ஓலா' என்றால் ஹாய். கிராசியஸ் என்றால் நன்றி. 'ஓலா' சொல்ல நினைத்து 'கிராசியஸ்' சொல்லிக்கொண்டிருகிறேன் என்று. (அத்திரி பாச்சா கொழுக்கட்டை கதை போல). ஒரு வழியாக, பயண முடிவின் பொது சில ஸ்பானிய வாக்கியங்களும், வார்த்தைகளும் தெரிந்துகொண்டோம்...அதை வைத்து எனது மொழி ஆராய்ச்சியில், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று கண்டுகொண்டேன். (வளரும்..)

3 comments:

  1. This is SO much fun to read! Brilliant! Try to get it published somewhere...

    I am surprised you guys did not know "Hola Senoritta" :)

    ReplyDelete
  2. @annacoder - "hola senoritta" is for chicas...visu was targeting uncles, so all those skipped out of his system and mine (mainly because of my surprise about this target audience)

    @visu - you forgot an important detail - for the third question by military our answer would be "Indian" and for the fourth question only we'll say "non pablo espanol" and for later days "pequeño espanol"...

    ReplyDelete
  3. @anna-coder: intha naatu kaathu naraiya adikuthaey!!! athuvum akka-kal kaathu innum jaasthiya adikuthey.. :P..

    @visu - good post da.. it reminds me of my trip from mumbai to matheran without knowing a word in hindi n marathi jus 3 yrs ago.. :)..

    ReplyDelete